பிரபல சமையல் கலை வல்லுநரும், Food Content Creator-மான நிக் டிகியோவானி, அண்மையில் உணவு சமைக்க ஒரு எலி தனக்கு உதவும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
பல உணவு பிரியர்களுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான “ரட்டாடவுலி” (RATATOUILLE) என்ற அனிமேஷன் திரைப்படம் MOST FAVORITE ஆக இருந்திருக்கும். பல உணவு வகைகளை சமைத்து, பிரபலமான சமையல் கலை வல்லுநராக திகழ வேண்டும் என விரும்பும் ‘ரெமி’ என்ற எலி, அருவருப்பான தோற்றத்துடன் காணப்படும் ‘லிங்குயினி’ என்ற சமையல் தொழிலாளியுடன் இணைந்து, ருசியான பார்சிய உணவு வகைகளை சமைப்பதுபோல இத்திரைப்படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும்.
பிரபல சமையல் கலை வல்லுநரும், Food Content Creator-மான நிக் டிகியோவானி, இந்த திரைப்படத்தின் மீதான காதலை தனது செயல் மூலம் புதிய உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளார். இத்திரைப்படத்தில் வருவதுபோலவே சமைக்கும்போது தனக்கு உதவ ஒரு எலியை வாங்கி, அதற்கு உரிய பயிற்சியும் அளித்த நிக், தனது எலிக்கும் அந்த கதாப்பாத்திரத்தின் பெயரையே சூட்டியுள்ளார். அண்மையில் நிக் அந்த எலியுடன் சேர்ந்து திரைப்படத்தில் வரும் RATATOUILLE என்ற பிரபல French Dish-ஐ சமைக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
தன்னை பின்தொடர்பவர்களுக்கு இதுகுறித்த தனது அனுபவத்தை பகிந்துகொண்ட நிக், தான் ஒரு புத்திசாலித்தனமான எலியை வாங்கி உரிய பயிற்சியளித்ததாகவும், எலி உணவு சமைக்க தேவைப்படும் சமையல் உபகரணங்களுடன் Customize செய்யப்பட்ட ஒரு சமையல் அறையை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், ரெமி என்ற எலி, நிக்கிற்கு நேரடியாக உதவாவிட்டாலும், அவரது சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சரியாக தேர்வு செய்து கொடுக்கும் காட்சிகள் காண்பவர்களை விழி பிதுங்க செய்கிறது.
தொடர்ந்து வெட்டப்பட்ட காய்கறிகளை முறையாக ஒழுங்குபடுத்துவது, சமையல் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றுவது, Automatic Stirring machine-ஐ இயக்கி சமைக்கும் உணவை கிளறிவிடுவது என நிக்கின் சமையலுக்கு பல வகையில் ரெமி உதவுவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இதுமட்டுமல்லாமல் தான் சமைக்கும் உணவு சரியான முறையில் தயாராகிறதா என ரெமி அவ்வப்போது முகர்ந்து பார்த்து சோதிக்கவும் செய்யும் என்கிறார் நிக்.
உணவு தயாரானதும் நிக் அதனை எடுத்து Plating செய்ய, அவரது அறிவுறுத்தலை ஏற்று ‘RATATOUILLE’ திரைப்படத்தில் வருவதுபோல, நிஜவுலக ரெமியும் உணவின் மீது ஒரு வெங்காய துண்டை வைத்து அதனை அலங்கரிக்கும் காட்சி காண்போருக்கு உண்மையிலேயே ஒரு Wow moment தான்.
நிக்கின் இந்த வீடியோ இணையவாசிகளை திகைப்பிலும், RATATOUILLE திரைப்பட ரசிகர்களை நெகிழ்ச்சியிலும் மூழ்கடித்துள்ள நிலையில், குட்டி எலியான ரெமியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும், அதற்கு பயிற்சியளித்த நிக்கின் முயற்சிகள் குறித்தும் புகழ்ந்து அவர்கள் Comments-களை குவித்து வருகின்றனர்.