கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை காப்பாற்ற வலியுறுத்தி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குன்றிமலை அடிவாரத்தில் 41 அடி உயரத்தில் குண்டேரிபள்ளம் அணை உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக அணை தூர்வாரப்படாததால், அணையின் அருகே ஆழ்குழாய் கிணறு அமைத்து விளைநிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நிபந்தனையுடன் வருவாய்த்துறை அனுமதி வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 ஆண்டுகளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 4 நாட்களுக்கு முன்பு அணை அருகே குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதனால் ஆத்திமடைந்த பொதுமக்கள், கோபி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 4வது நாள் போராட்டத்தில் தலைமை செயலகத்திற்கு அஞ்சல் மூலம் ஆதார் அட்டைகளை அனுப்பினர்.