முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிசிசிஐ கௌரவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-ன் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மொத்தம் 26 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சி.கே. நாயுடு பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவருக்கு விருதினை பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா வழங்கினார்.
அண்மையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ-யின் சிறப்பு விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
அதேபோல, சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது பும்ராவுக்கும், சிறந்த அறிமுக வீரருக்கான விருது சர்ஃபராஸ் கானுக்கும் வழங்கப்பட்டன. இந்திய மகளிர் அணியின் ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.