தூத்துக்குடி அருகே தனியார் நிதி நிறுவனம் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது தம்பதி விஷம் குடித்ததில் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் – பத்திரகாளி தம்பதி சில வருடங்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய 5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை சரியாக திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
நீதிமன்றம் உத்தரவின்படி, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்ய வந்தபோது தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதில், கணவர் சங்கரநாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனைவி பத்திரகாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.