திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு, மாவட்ட ஆட்சியர் வாயிலாக அகில பாரத இந்து மகா சபாவினர் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை ஆட்சியரிடம் அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராம.நிரஞ்சன் வழங்கிய மனுவில், திருப்பரங்குன்றம் முருகன் மலையை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்ய சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
முருகன் மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் ராமநாதபுரம் எம்பி செயல்பட்டு வருவதாகவும், மலையில் உயிர்பலி கொடுத்து கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மலையை சுற்றி மது, மாமிசம் சாப்பிட தடை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.