நீலகிரி மாவட்டம் மசினகுடியில் வனத்துறையினரை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய கட்டுமானப் பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களை, வனத்துறையினர் தேவையில்லாமல் தடுத்து நிறுத்தி தொல்லை கொடுத்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், 35 ஆண்டுகளுக்குமேல் வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டாவுடன் கூடிய வீட்டுமனை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.