மதுரையில் போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
சந்தோஷ்குமார் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக, அரசரடியில் உள்ள ஏரோசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அப்போது, மருத்துவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அவர், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில், 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ராணி என்பவர் மருத்துவம் பார்த்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.