நாகையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மின்னொளியில் சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.
நாகையில் வீரத்தமிழன் சிலம்ப கலைக்கூடம் மற்றும் வேர்ல்டு ஸ்டார் புக் ஆப் ரெகார்ட் நிறுவனம் சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், 15 மாவட்டங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட சிலம்பத்தை மூன்று மணி நேரம் இடைவிடாது சுழற்றி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர். இதனை அங்கீகரித்து வேர்ல்டு ஸ்டார் புக் ஆப் ரெகார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கியது.