தமிழ்நாடு – கர்நாடகா மாநில எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே ஒற்றை யானை உணவு தேடி அவ்வப்போது சாலையை மறித்து வருவதால், லாரி ஓட்டுநர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஒற்றை யானை வலம் வருகிறது. அதனை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.