ஜனவரி மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல், ஆண்டுக்கு 12.3 சதவீதம் உயர்ந்து, 1.96 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
2024-ம் ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி மொத்த வசூல் 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25-ம் நிதியாண்டில் இதுவரை மொத்த ஜிஎஸ்டி வசூல், 9.4 சதவீதம் அதிகரித்து, 18.29 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகவும், இது 2023-24-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 16.71 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.