கடலூர் மாவட்டம் வெள்ளைக்கரை அருகே 165 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெள்ளைக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம், கொடுக்கம்பாளையம் உள்ளிட்ட 4 கிராமங்களில் 165 ஏக்கர் அரசு நிலத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, தனியார் தோல் தொழிற்சாலைக்கு தாரை வார்க்க ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பயிர்கள் அழிக்கப்பட்டன. நீதிமன்ற தடையை அடுத்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், திமுக அரசின் அராஜகத்தை கண்டித்து பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தலைமையில் பாஜகவினர் மற்றும் கிராம மக்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.