கும்பகோணத்தில் அரசு கல்லூரி வளாகத்திலேயே மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசினர் கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்துவந்த மாணவி ஒருவர் வகுப்பில் மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர் மற்றும் மாணவிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவிக்கு ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளதாகவும் இதனாலேயே மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாணவியிடம் இதுகுறித்து விசாரித்தபோது கல்லூரி வளாகத்திலேயே அவர் குழந்தையை பெற்றெடுத்ததும், குழந்தையை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி வளாகத்தில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.