ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு-செலவு தொடர்பான கணக்கு விவரங்களை இனி பார்க்கலாம்..!
மத்திய அரசுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாயில் 24 காசுகள் கடன் வாங்குவதன் மூலமும் 22 காசுகள் வருமான வரி மூலமும் பெறப்படுகின்றன. 18 காசுகள் ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் மூலமாகவும், 17 காசுகள் கார்ப்பரேஷன் வரியாகவும், 9 காசுகள் வரியில்லா வருவாய் மூலமும் கிடைக்கின்றன.
மேலும், 5 காசுகள் மத்திய கலால் வரியாகவும், 4 காசுகள் சுங்க வரியாகவும், ஒரு காசு கடனில்லா மூலதன வருவாயாகவும் ஈட்டப்படுகிறது.
இதேபோல், மத்திய அரசிடம் இருக்கும் ஒரு ரூபாயில் 22 காசுகள் மாநில வரிப் பகிர்வுக்காக செலவிடப்படுகிறது. 20 காசுகள் கடனுக்கான வட்டி செலுத்துவதன் மூலமும், 16 காசுகள் மத்திய அரசின் திட்டங்களுக்காவும் செலவாகிறது.
மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள், நிதிக்குழு செலவினங்கள் மற்றும் பாதுகாப்பிற்கு தலா 8 காசுகளும், மானியங்களுக்கு 6 காசுகளும், ஓய்வூதியத்துக்கு 4 காசுகளும், இதர செலவினங்களுக்கு 8 காசுகளும் செலவிடப்படுகிறது.