கன்னியாகுமரி அருகே வீட்டு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியது. இதில், எலக்ட்ரீக் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியைச் சேர்ந்த சுந்தர பால் என்பவர், கடந்த 30-ம் தேதி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் செய்துவிட்டு, இரவு தூங்க சென்றுள்ளார்.
அப்போது, ஸ்கூட்டரில் இருந்த பேட்டரி வெடித்து சிதறியது. இதில், வீட்டின் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை சேதமடைந்தன. இது தொடர்பான, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.