ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அந்த நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் நட்பு நாடான வடகொரியா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியது.
இவ்வாறு மாறி மாறி தாக்குதல் நடைபெறும் சூழலில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.