ரோகித் மற்றும் விராட் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகுந்த மதிப்பைச் சேர்க்கிறார்கள் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், துபாய்க்குச் செல்வதன் நோக்கம் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது தான் என்றும், ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தை மட்டும் வெல்வது அல்ல எனவும் கம்பீர் கூறியுள்ளார்.