இந்தோனேஷியா முருகன் கோயில் குடமுழுக்கு விழா உரையில் ‘முருகனுக்கு அரோகரா’ என்று கூறிய பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, முருகனுக்கு அரோகரா” என்று கூறி தனது உரையை தொடங்கினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முருகனுக்கு அரோகரா என்று தமிழில் உரையை தொடங்கியது பெருமகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
தமிழக மக்களின் ஆன்மிக நம்பிக்கையை உலக அரங்கில் எதிரொலித்த பிரதமர் மோடிக்கு அனைத்து முருக பக்தர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.