ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்களை புதிய ராம்சார் தளங்களாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
உலக ஈரநில தினத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்களை புதிய ராம்சார் தளங்களாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் ராம்சார் பகுதிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாகவும், ஈர நிலங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், வளமான இயற்கை மரபை பாதுகாக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.