தாது வளம் நிறைந்த காங்கோவை கட்டுப்பாட்டுத்த போரடும் நூற்றுக்கணக்கான கிளர்ச்சிக் குழுக்களில் எம் 23 யும் ஒன்று.
கோமா நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் எம் 23 நடத்திய தாக்குதலில் ஒரு வாரத்தில் மட்டும் 773 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கோமா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும், காங்கோவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.