போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனை தவிர்த்து அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஈடுபடுவது மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அந்த நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன.
அதேபோல் நட்பு நாடான வடகொரியா ரஷ்யாவுக்கு உதவி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, உக்ரைனை தவிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஆபத்தாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.