எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தங்கச்சிமடத்தை சேர்ந்த எபிரோம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே இலங்கை கடற்படைக்கும், மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 மீனவர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.