சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது டிரம்ப் விதித்துள்ள வரிகளால் இந்திய பங்குச்சந்தைகளின் புள்ளிகள் சரிந்துள்ளன.
அமெரிக்க அதிபராக பதியேற்றதில் இருந்து நிர்வாக ரீதியான மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி, சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனால், கடந்த வாரம் முடிவில் ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் காலை சரிவுடன் தொடங்கின.