மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது.
மதுரை – சமயநல்லூர் பிரதான சாலையில் கார் ஒன்று இன்ஜின் பழுதாகி தீப்பிடித்து எரிய தொடங்கியது. காரில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு வந்த தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.