விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த ஆரோவில்லில் காய்கறி, கிழங்கு மற்றும் விதை திருவிழா நடைபெற்றது.
இதில் திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று மரபு காய்கறி, கிழங்கு வகைகளை காட்சிப்படுத்தினர்.
மேலும், மாடித்தோட்டம் அமைத்தல், விதைப்பந்து செயல்விளக்கம் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றன. இதனை ஏராளமான வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.