ஆந்திராவில் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்டில் சிக்கிக் கொண்ட பயணிகள் சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.
பிரகாசம் மாவட்டம் மார்க்கபுரம் ரயில் நிலையத்தில் நடைமேடை மாறுவதற்காக 14 பயணிகள் ஒரே நேரத்தில் லிஃப்டில் ஏறினர்.
அதிக சுமை காரணமாக சிறிது மேலே சென்ற பிறகு லிஃப்ட் நின்றுவிட்டது. கதவுகளும் திறக்காததால் பயணிகளின் அலறினர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததால் ரயில்வே போலீசாரே லிப்ட் மேல் உள்ள மின்விசிறியை அகற்றி அந்த துளை வழியாக மூன்று மணி நேரம் போராடி பயணிகளை மீட்டனர்.