ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரைக்குடியில் இருந்து ஆவின் பால் ஏற்றி வந்த வேன் திருவாடானை அருகே கல்லூர் மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி அருகில் இருந்த கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தின்போது கீழே கொட்டிய பாலை தவிர்த்து மீதமுள்ள 3 ஆயிரத்து 500 லிட்டர் பால் வேறு வண்டிக்கு மாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.