கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள வனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது காட்டு யானைகள் கிராமப் பகுதிக்குள் நுழையும் நிலையில், வனத்துறையினர் அவற்றை விரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பாவாடப்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்ற விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குவந்த காட்டு யானை அவரை தாக்கிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் முனியப்பன் உயிரிழந்தார்.