கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் அழிக்கப்பட்டிருந்த ஆதிகேசவ பெருமாள் கோயில் முகப்பு ஓவியம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மீண்டும் வரையப்பட்டது.
திருவட்டார் புதிய பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் உபயதாரார் உதவியோடு சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டன. அது போல் 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலின் முகப்பு ஓவியமும் வரையபட்டிருந்தது.
அந்த ஓவியத்தை மட்டும் திருவட்டார் திமுக பேருராட்சி நிர்வாகம் அழிக்க முடிவு செய்தது. இதற்கு ஆதிகேசவ பக்தர்கள் மற்றும் இந்து இயக்கங்கள் கண்டனம் தெரிவித்ததோடு இந்து முன்னணி மாநில பொது செயலாளர் அரசை ராஜா தலைமையில் பேருந்து நிலையம் முன் ஆர்பாட்டமும் நடைபெற்றது.
மேலும் இந்த ஓவியம் அழிக்கப்பட்டது குறித்து நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பேருந்து நிலையத்தில் அழிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் ஆதிகேசவ பெருமாள் கோயில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.