தமிழ்நாடு ஆளுநரை நீக்கக்கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் உரையின்போது சட்டசபையில் இருந்து வெளியேறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் ஆகவே அப்பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர் ஜெய்சுகின் வாதித்தார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், ஆளுநர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், மனுதாரரின் கோரிக்கை அரசியலமைப்பு நடைமுறைக்கு புறம்பாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.