பழனி உழவர் சந்தையில் பூண்டு மூட்டைகளை இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் செயல்படும் உழவர் சந்தையில், இரவு நேரத்தில் நுழைந்த இருவர், கடைக்குள் புகுந்து பூண்டு மூட்டைகளை திருடி சென்றுள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.