ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெண்ணை கடித்த பாம்பை லாவகமாக பிடித்த பாம்புபிடி வீரர் அதை வனப்பகுதியில் விடுவித்தார்.
மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரது வீட்டில் உறவுக்கார பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவரை வீட்டிற்குள் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது.
இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாம்புபிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர், பீரோவின் பின்னால் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.