ஏடிஜிபி கல்பனா நாயக் அலுவலகம் தீக்கிரையான விவகாரத்தில் சதித்திட்டம் ஏதும் இல்லை என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து நடைபெற்ற அன்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டதாகவும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக தெரியவில்லை எனவும் டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.