திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.
மீஞ்சூர் அருகேயுள்ள அரசுப்பள்ளியில் அரசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது காட்டுப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது.
இந்த விபத்தில் அரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.