ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று வடமாநிலத்தவர் தவறி விழுந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த உப்லவ் மேத்தா என்ற பயணி வருகை தந்தார். அப்போது நடை மேடையில் இருந்து புறப்பட்ட சங்கமித்ரா ரயிலில் ஏற முயன்ற அவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதை பார்த்த ரயில்வே தலைமை காவலர், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து அந்த நபரை உடனடியாக மீட்டார். இதில் அந்த பயணிக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.