ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக வனப்பகுதகளில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம், ஜவுளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளது.
இரவு நேரங்களில் விளைநிலங்களை காட்டு யானை கூட்டம் சேதப்படுத்தி வரும் நிலையில், பாவாடப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்ட விவசாயிகள், யானைகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.