எல்லையில் சீன ஊடுறுவலை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து தரவுகளும் சீனாவுக்கு சொந்தமானவை எனக்கூறிய ராகுல் காந்தி, உற்பத்தியை ஒழுங்கமைப்பதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, லடாக்கில் சீன ராணுவத்தின் ஊடுருவல் இருப்பதாகவும், இந்த ஊடுருவலை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாக கூறினார்.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்காதது குறித்து ராகுல் காந்தி தவறான தகவல்களை வெளியிடுவதாக கூறிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அவையில் அதை வழங்கலாம் என தெரிவித்தார்.