மக்களவையில் ஆளுநர் விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி பேசிய நிலையில், அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி உரையாற்றினார்.
அப்போது எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்த ஆளுநர்கள் பயன்படுத்தப்படுவதாக கனிமொழி விமர்சித்தார். இதற்கு அவையில் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநர் தொடர்பான கருத்துக்களை முன்வைக்க மக்களவையில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து கனிமொழியின் பேச்சின் ஒரு பகுதி அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.