உதயசூரியனுக்கு வாக்களித்தால் கருணாநிதி வீட்டில் மட்டுமே வெளிச்சம் வரும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கிருஷ்ணம்பாளையம் பகுதியில் சீமான் வாக்கு சேகரித்தார்.
காசு கொடுத்து ஓட்டு வாங்கும் கட்சிக்கு எதற்கு திராவிட மாடல் வேண்டி உள்ளது என கேள்வி எழுப்பிய சீமான், காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
உதயசூரியனுக்கு வாக்களித்தால் கருணாநிதி வீட்டில் மட்டுமே வெளிச்சம் வரும், மக்களுக்கு வெளிச்சம் கிடைக்காது எனக்கூறிய சீமான், வெற்றி பெறுவோம் என்ற திமிருடன் திமுகவினர் பிரச்சாரத்திற்கு வராமல் இருப்பதாக விமர்சித்தார்.