கிராமி விருது வென்றுள்ள இந்திய வம்சாவளி பாடகி சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, சந்திரிகா டான்டனின் சாதனைகளால் தேசம் பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
திரிவேணி ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்ற சந்திரிகா டான்டனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்திய கலாச்சாரத்தை பிரபலப்படுத்த பாடுபட்டவர் சந்திரிகா டாண்டன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவர் சந்திரிகா டான்டன் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.