மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் இன்று அறப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாநகரில் நேற்று காலை முதல் இன்றிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
பொது போராட்டங்கள், தர்ணா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஆட்சியர் தடை விதித்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படிக்கட்டுகள் இல்லாமல் வேறு எந்த பாதையிலும் யாரும் மலைக்கு ஏறாத வண்ணம் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.