சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக விமானம் மற்றும் ரயில்கள் தாமதாக புறப்பட்டு சென்றன.
சென்னையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. வழக்கத்தை விட பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனி மூட்டம் காரணமாக உள் நாட்டு பன்னாட்டு விமானங்கள் வருகை புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது,
நான்கு விமானங்கள் ஹைதராபாத், பெங்களூர், திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டது
8 பன்னாட்டு விமான ங்கள் எட்டு தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது
தற்போது கிடைத்துள்ள தகவலின் படி பனி வீச்சு குறைந்ததால் 15க்கும் மேற்பட்ட விமானங்கள் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.