சுவாமி விவேகானந்தர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் என்றும், அவரது கருத்துகள் அனைவருக்குமானவை எனவும் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்ய ஞானானந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள வினேகானந்தர் நினைவு இல்லத்தில், வருகிற பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி விவேகானந்தர் நவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்ய ஞானானந்தர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், விவேகானந்தர் நவராத்திரிக்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
விவேகானந்தரின் புத்தகங்களை படித்தால் போதை பழக்கத்தில் இருந்து வெளியே வரலாம் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்வழியில் பயணிக்க விவேகானந்தரை படிக்க வேண்டுமெனவும் எனவும் கேட்டுக்கொண்டார்.