திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் 150 மாணவர்கள் ஒற்றைக் காலில் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
கொடைக்கானலில் அமைந்துள்ள மலை கிராமமான தாண்டிக்குடியில் சிலம்பம் சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று 3 மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தனர்.
இந்த சாதனையை இண்டர்நேஷனல் ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவினர் அங்கீகரித்து, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர்.