மும்பை-புனே விரைவுச் சாலை நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் விரைவு சாலையாக திகழ்ந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனே வரை அமைக்கப்பட்டுள்ள விரைவுச் சாலை கடந்த 2022ஆம் ஆண்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
சுமார் 94 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் பயணம் செய்தால் மும்பையில் இருந்து புனேவிற்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிட முடியும் என்பதால், நாட்டிலேயே மிகவும் அதிக கட்டணம் வசூலிக்கும் நெடுஞ்சாலையாக உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளின் மொத்த வரி வசூல் 580 கோடியாக இருந்த நிலையில், மும்பை-புனே விரைவுச் சாலை மட்டும் 163 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.