தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் மிகப்பெரிய இந்து கோயில் திறக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமான ஜோகன்னஸ்பர்க்கில், மிகப்பெரிய இந்து கோயில் மற்றும் கலாச்சார வளாகம் திறக்கப்பட்டது.
BAPS அமைப்பின் ஆன்மீகத் தலைவர் மஹந்த் சுவாமி மகாராஜ் தலைமையில் திறக்கப்பட்ட இந்தக் கோயில் கலை, நடனம், மொழி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மேலும், பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதே இந்த கோவிலின் நோக்கமாக கூறப்படுகிறது. கோயில் திறப்பு விழா மற்றும் சிறப்பு பூஜையில் இந்து ஆன்மிகவாதிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.