இந்து முன்னணியின் அறப்போராட்டம் எதிரொலியாக உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக, இந்து அமைப்பினர் இன்று அறப்போராட்டம் அறிவித்ததால், மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அறப்போராட்டத்தில் பங்கேற்பர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிர்வாகிகள் பலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மதுரை – தேனி எல்லைப் பகுதியான ஆண்டிபட்டி கனவாய் பகுதி, உசிலம்பட்டி தேவர் சிலை, திண்டுக்கல் மாவட்ட எல்லை பகுதியான உத்தப்பநாயக்கனூர், எழுமலை பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை – சிவகங்கை எல்கைப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் சிவகங்கை எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.