தன்பாலின ஈர்ப்பு சமூகத்தினருக்கான வரைவு கொள்கையையும், 3-ம் பாலினத்தவர்களுக்கான வரைவு கொள்கையையும் பிப்ரவரி 17-ம் தேதி சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்பாலின சமூகத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 3-ம் பாலினத்தவர்களுக்கான தனிக்கொள்கையை வகுக்க வேண்டுமென அரசு முடிவெடுத்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன்பாலின ஈர்ப்பு சமூகத்தினர் மற்றும் 3-ம் பாலினத்தவர்களுக்கு ஒரே கொள்கையை வகுப்பதே முறையாக இருக்கும் என தெரிவித்ததுடன், இரு பிரிவினருக்குமான வரைவு கொள்கையை பிப்ரவரி 17-ம் தேதி சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். `