புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பாரம்பரிய பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பழமையான கார்கள், 15-க்கும் மேற்பட்ட பழமையான இருசக்கர வாகனங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. இக்கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பயணித்த காரின் பின்பக்க இருக்கையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.