மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பேக்கரி உரிமையாளரை தாக்கிவிட்டு தப்பி சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், குமரன் குன்று பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் ஒருவர் காத்திருந்த நிலையில், அவ்வழியே சென்ற அரசு பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர், நண்பர்களுடன் சேர்ந்து அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்க முயன்றுள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது தகராறை தடுக்க முயன்ற பேக்கரி உரிமையாளரையும் தாக்கிவிட்டு இளைஞர் தப்பி சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.