உத்தர பிரதேசத்தில் ராமனுக்கு எதிராக நின்ற அரசியல் கட்சிகளுக்கு நேர்ந்த அதே வீழ்ச்சி நிலை தான் திமுகவுக்கு ஏற்படும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தாலிபான்களின் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நமக்கு உணர்த்துகிறது. உத்தர பிரதேசத்தில் ராமஜென்ம பூமியில் வில்லேந்திய ராமனுக்கு எதிராக நின்ற அரசியல் கட்சிகளுக்கு நேர்ந்த அதே வீழ்ச்சி நிலை..!!
தமிழகத்தில் திருப்பரங்குன்றத்தில் வேலேந்திய முருகனுக்கு எதிராக நிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் நிகழும்..!! ஹிந்து தர்ம சக்தி வீறுகொண்டு எழும்! ஹிந்து விரோத தீயசக்தி வீழ்ந்து போகும்!! என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.